Skip to main content

பாஜகவின் கோவில் அரசியல்... குட்டு வைத்த நீதிமன்றம்!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

BJP's temple politics...  court!

 

குமரி மாவட்டம் வேளிமலை குமாரகோவில் முருகன் கோவிலில் ஜூன் 11ஆம் தேதி  நடந்த தேரோட்டத்தின்போது இந்து மதம் நம்பிக்கை இல்லாத மாற்று மதத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடத்தைப் பிடித்து இழுக்க பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை மீறியும் அவர் தேரின் வடம் பிடித்து இழுத்தார். அதேபோல் ஜூன் 14-ம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை தொடக்க விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொள்வதற்கும் பாஜகவினர் எதிர்ப்பு காட்டியதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சியில் மனோதங்கராஜ் கலந்து கொள்ளாமல் அவருக்கு பதில் இந்து மதத்தை சேர்ந்த நாகர்கோவில் மேயர் மகேஷ் அதில் கலந்து கொண்டார்.

 

இந்தநிலையில்தான் தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வருகிற 6-ம் தேதி நடக்க இருக்கிறது. அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட கும்பாபிஷேக அழைப்பிதழில் அமைச்சர் மனோ தங்கராஜின் பெயர் இடம் பெற்றிருந்ததால் பாஜகவினருக்கு அது உஷ்ணத்தை ஏற்றியது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

mm

 

மேலும் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன், இந்துக்கள் அல்லாதவர்கள் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது. மேலும் கும்பாபிஷேகத்திற்காக பக்தர்களிடமிருந்து பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் விழாக்களில் கலந்து கொள்ளும் ஆண்கள் மேல் சட்டையைக் கழற்றி விட்டு தான் பங்கேற்க வேண்டும். அரசு விழாவாக நடைபெறும் போது இந்துக்கள் அல்லாதவர்கள் கலந்து கொள்ளும் போது சம்பிரதாயங்கள் கடைபிடிக்காமல் கோவிலின் புனிதம் கெட வாய்ப்புள்ளது. எனவே இந்துக்கள் அல்லாதவரை நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

 

அந்த மனுவை விசாரித்து நீதியரசர்கள் பி.என் பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் கும்பாபிஷேகம் விழாக்களில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளில் சொல்லப்படவில்லை. 120 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் இறை நம்பிக்கை கொண்டவர்கள் கோவிலுக்கு செல்லும்போது அவர்களின் மதத்தை உறுதி செய்வது பெரும் பிரச்சினையை வழிவகுக்கும்.

 

எனவே இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை பரந்த மனபான்மையில் அணுக வேண்டும் என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். இது பாஜகவினருக்கு பலத்த எதிரடியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் மனோ தங்கராஜ் ஐகோர்ட் கிளையின் தீர்ப்பு போலி ஆன்மீகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு கிடைத்த செருப்படி என்றிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.