Skip to main content

“விவசாயிகளிடம் மோதலை உருவாக்கி லாபம் பார்க்கப் பார்க்கிறது பா.ஜ.க!” - முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

"BJP is trying to make a profit by creating conflict with the farmers!" DMK Periyasamy


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, “எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்ல திட்டங்களையும் சலுகைகளையும் செய்துவருகிறேன். அதுபோல் எனது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றிவருகிறேன். இது தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். தொகுதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் பல்வேறு திட்டங்களை தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தி இருக்கிறேன்.

 

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பதால் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த ஆளும் அ.தி.மு.க அரசு தவிர்த்து வருகிறது. இருந்தபோதும் சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் சொந்தப் பணத்தில் வளர்ச்சி பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். மேலும், பிரதான குடகனாறு நீர் பங்கீடு பிரச்சனையில், முத்தரப்பு விவசாயிகளின் நலனுக்காகவும் பொது மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்காகவும் முழுவீச்சில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

அந்தக் காலத்தில் கன்னிமார் கோயில் அருகே நரசிங்கபுரம் தெற்குப் பகுதிக்கும் ஆத்தூர் ராஜா வாய்க்காலுக்கும் கொடகனாற்றுக்கும் தண்ணீர் செல்வதற்காகக் கற்களை வைத்து அணை போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் முன்னோர்கள். இந்த நிலையில் சமீபகாலமாக நரசிங்கபுரம் ராஜவாய்க்கால், ஆத்தூர் ராஜவாய்க்கால், குடகனாறு ஆகிய மூன்று தரப்பு விவசாயிகளுக்கு  இடையே தண்ணீர் பகிர்ந்து கொள்வதில் ஒரு சிக்கல் இருந்து வருகிறது. அதுவும் கற்களாலான அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிமெண்ட் போட்டு அடைத்ததால் ஏற்பட்ட சிக்கல். அந்தச் சிக்கலை தீர்த்து மூன்று தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஒரு தீர்வை ஏற்படுத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். 


அதன் விளைவாக மாவட்ட ஆட்சியர் தலைமையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அவர்களுக்குள் சில முக்கிய முடிவுகளை எடுத்து அறிவித்தார்கள். அதனை மூன்று தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படையில் குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து இனிவரும் காலங்களில் தண்ணீர் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி, விவசாயிகளும் அதனை வழிமொழிந்தனர்.

 

Ad

 

அதன் தொடர்ச்சியாக ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது அரசு, அந்தக் குழு தண்ணீர் பகிர்வதில் பிரச்சனைக்குரிய இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தது. மூன்று தரப்பு விவசாயிகளிடமும் கருத்துக் கேட்டு, தங்கள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அந்த அறிக்கையை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடியாக வல்லுநர் குழு கூறியுள்ள தீர்வு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 
 

இந்த நடவடிக்கையை பருவமழை தொடங்குவதற்கு முன் செயல்படுத்த வேண்டும். தண்ணீர் பகிர்வதில் உண்மை நிலை இதுதான். அப்படி இருக்க முதலில் நரசிங்கபுரம் ராஜ வாய்க்கால் மூலமாக தண்ணீர் செல்லும்போது, அந்தப் பகுதியில் என்னுடைய விவசாய நிலத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்வதாகவும் மற்றும் எனது தொழிற்சாலைக்கும் தண்ணீர் கொண்டு செல்வதாகவும் ஒரு புரளியைக் கிளப்பினார்கள். இது முற்றிலும் பொய்யான தகவல்.

 

நரசிங்கபுரம் ராஜ வாய்க்கால் தண்ணீர் செங்கட்டான் குளத்துடன் முடிவடைகிறது. மிதமிஞ்சிய நீர் வரத்துக் காலத்தில் மட்டுமே குடிநீர்த் தேவைக்காக நிலக்கோட்டை பகுதிகளுக்குச் செல்வது அனைத்து விவசாயத் தரப்பினரும் அறிந்த உண்மை. அதைத் தாண்டி வத்தலகுண்டு போவதற்கு வாய்க்கால் இல்லை என்ற எதார்த்த உண்மையை மறைத்து பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு குடகனாற்றில் தண்ணீர் வரும்போது அனுமந்த ராயன் கோட்டை பகுதியில், எனக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அதற்காக தண்ணீரைக் கொண்டு செல்வதாகவும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். 

 

Nakkheeran


பிரச்சனைக்குரிய தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் நரசிங்கபுரம் தெற்கு வாய்க்கால் பகுதியிலோ அல்லது அனுமந்தரான் கோட்டை பகுதியிலோ எனக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என்பதுதான் உண்மை. அந்தப் பகுதிகளில் பிரச்சனைக்குரிய தண்ணீரை நான் எனது நிலத்திற்காகப் பயன்படுத்தியதை யாராவது ஒருவர் நிருபித்தாலும் அரசியலை விட்டு விலகிக்கொள்ளத் தயார். இதனை நான் சவாலாகவே சொல்கிறேன். மக்கள் பிரச்சனையில் தொடர்ந்து பங்காற்றி வரும் என்னை, மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழும் என்னை, போட்டியாக நினைப்பவர்கள் அவர்களும் மக்கள் பணியில் கவனம் செலுத்தட்டும். அதனைவிடுத்து சமூக வலை தளங்களில் பொய்ப் புகார்களை பரப்புவதால் நான் அஞ்சமாட்டேன். ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொகுதிக்காக நான் எடுக்கும் முயற்சிகளை மக்கள் நன்கு அறிவார்கள்.

 

என் மீது குற்றம் சுமத்துவர்கள் ஆதாரத்துடன் குற்றம் சுமத்தினால், அதனை எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறேன். அவதூறுகளையும் பொய்ப் பிரச்சாரத்தையும் முன்னிறுத்தி, விவசாயிகள் மற்றும் பொது மக்களை திசைதிருப்பி, அதன் மூலம் ஆதாயம் தேடலாம் என்று நினைப்பவர்களின் நரித்தனமும் நப்பாசையும் எடுபடாது என்பதை இதன்மூலம்  தெரிவிப்பதோடு, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.  இதில் பி.ஜே.பி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. அந்தக் கட்சி, இதுவரை எள் முனைகூட மக்களுக்கு நல்லது செய்தது கிடையாது. மதத்தை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது விவசாயிகளிடம் மோதலை உருவாக்கி லாபம் பார்க்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.” என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.