Skip to main content

பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க கோரி பாஜகவினர் போராட்டம்! (படங்கள்)

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

மாநில பாஜக தலைவர் K. அண்ணாமலை வழிகாட்டுதல்படி மாநில பட்டியல் அணி & மாநில வணிகர் பிரிவு இணைந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்  நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாநில பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், மாநில பட்டியல் அணித் தலைவர் பொன். பாலகணபதி மற்றும் மாநில வணிகர் பிரிவு தலைவர் ராஜா கண்ணன், மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

 

தமிழ்நாடு பாஜக மாநில பட்டியல், மாநில தலைவர் பால கணபதி பேசும்போது, “தேர்தல் காலத்தில் பெட்ரோல் - டீசல் விலையைக் குறைப்போம் என்று சொல்லி ஆட்சிக்குவந்த பிறகு குறைக்காமல், மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்து பிறகும்கூட திமுக ஆட்சி விலையைக் குறைக்க முன்வரவில்லை. இந்த விலையைக் குறைக்க தமிழ்நாடு பாஜக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியின்  கண்ணீரை அவரது கண்ணே நம்பாது'- முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
'His eyes will not believe Modi's tears'-Criticism of CM Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அண்மையில் சேலம் வந்திருந்த பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது கண் கலங்கி பேசியிருந்தார். இந்நிலையில், சேலம் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில், 

'நேற்று மாலைச் செய்தி:
தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி:
அழகிய தமிழ்ச் சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?

கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?

ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர்  இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே...

கருப்புப் பணம் மீட்பு,
மீனவர்கள் பாதுகாப்பு,
2 கோடி வேலைவாய்ப்பு,
ஊழல் ஒழிப்பு போல்
காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான்,
அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

"எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!

தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!' என தெரிவித்துள்ளார்.

Next Story

அதிமுகவில் இணைந்த பாஜக முக்கிய நிர்வாகி; தேர்தல் நேரத்தில் பரபரப்பு

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் பாஜகவின் பட்டியல் அணி தலைவராக இருந்த தடா பெரியசாமி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்த தடா பெரியசாமி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜகவில் இடம் கிடைக்காததால் அவர் அதிமுகவில் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மறுக்கப்பட்டதால் இந்த முடிவை தடா பெரியசாமி எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.