ஆதார் தகவலை திருடி வாக்கு சேகரிக்கும் பாஜக? - விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Advertisment

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் பூத் அளவிலான வாக்காளர்களுக்கு பாஜக வாட்ஸ்-அப் குழுவில் இணையுமாறு இணைப்புடன் (லிங்)குறுஞ்செய்திகள் வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர், ஆதார் அட்டையில் அளிக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணில் மட்டுமே அவ்வாறான குறுஞ்செய்திகள் வருவதாகவும், மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆதார் தகவல்களைத் திருடியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் புகார் மிகத் தீவிரமானது எனக் கூறி, இதுகுறித்து விசாரித்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.