BJP sitting MLA to join AIADMK?

அண்மையில் காங்கிரஸில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி பாஜகவுக்கு தாவியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பாஜகவில் உள்ள சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் அதிமுகவில் இணைய இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சரஸ்வதி. இவருடைய மருமகன் ஆற்றல் அசோக்குமார். இவர் பாஜகவில் ஓபிசி அணி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிலையில் பாஜக மாநில தலைவருக்கும், ஆற்றல் அசோக் குமாருக்கும் இடையே அண்மைக்காலமாகவே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் சேர்ந்திருந்தார் ஆற்றல் அசோக்குமார். இந்நிலையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதியும் தமிழக பாஜகவில் ஏற்பட்ட முரண் காரணமாக பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியது. ஆனால் இந்த தகவலை எம்.எல்.ஏ சரஸ்வதி தரப்பு மறுத்துள்ளது.

Advertisment