தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்துஅவதூறாகப்பேசிய விவகாரத்தில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக பிரமுகரான கல்யாணராமன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் மருத்துவர்ஷாலினிகுறித்து சமூக வலைத்தளத்தில்அவதூறாகக்கருத்து தெரிவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில்போலீசார்நேற்று நள்ளிரவு அவரை கைது செய்துள்ளனர். புகார் அளிக்கப்பட்ட 10 மணி நேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவுபோலீசார்கைது செய்தனர். இந்தநிலையில் பாஜக பிரமுகர் கல்யாணராமனின்ட்விட்டர்பக்கத்தை நிரந்தரமாக முடக்கசைபர்கிரைம்போலீசார் ட்விட்டர்நிறுவனத்திற்குப்பரிந்துரை அளித்துள்ளனர்.