Bilateral Clash at Temple Festival

கடலூரில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் சரகத்திற்கு உட்பட்ட நத்தம் கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கோவில் திருவிழாவை நடத்துவதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் மோதல் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். பின்னர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்தக்காவல்துறையினர் இரு தரப்பு மோதலையும் சமாதானப்படுத்த முயன்ற நிலைகளிலும் காவல்துறையினர்பாதுகாப்பை மீறி ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

கோவில் திருவிழாவில் காவல்துறை முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.