bike suddenly caught fire in Vellore

வேலூர் அணைக்கட்டிற்கு அருகே உள்ளசின்னஊனை கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான புருஷோத்தமன். இவர் காட்பாடி விருதம்பட்டில் மாரியம்மன் கோவில் அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென டூ வீலர் தீ பிடித்தது.

Advertisment

இதனால் அதிர்ச்சியடைந்த புருஷோத்தமன் டூவீலரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. வாகனம் முழுவதும் தீ பற்றி எரிய துவங்கியது. அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்தும் டூவீலர் முழுவதுமாக எரிந்தது. இதுக்குறித்து விருதம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment