Skip to main content

பைக் ஷோரூமில் தீவிபத்து... கொழுந்துவிட்டு எரிந்த இருசக்கர வாகனங்கள்!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Bike showroom fire ... Two-wheelers on fire!

 

கரூரில் பஜாஜ் ஷோரூமில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.

 

கரூர்-கோவை சாலையில் திருக்காம்புலியூர் என்ற இடத்தில் பஜாஜ் ஷோரூம் ஒன்று இயங்கிவருகிறது. நேற்று வழக்கம்போல் பணி முடிந்த பிறகு ஊழியர்கள் ஷோரூமை மூடிவிட்டு சென்ற நிலையில் இன்று காலை பழைய வாகனங்கள் பழுதுநீக்கும் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ ஷோரூம் முழுக்க பரவியது. கொழுந்துவிட்டு எரிந்த தீயில் பழையது, புதியது என பல லட்சம் ரூபாய் மதிப்புடைய இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரை பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்துக்கு மின்கசிவே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்!

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Demonstration demanding the passing of the Lawyer Protection Act

கரூர் மாவட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும், இந்தி திணிப்பை தடுக்க வேண்டும், குற்றவியல் சட்ட மாற்றங்களைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story

மூட்டை மூட்டையாக வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்;  தனியார் மருத்துவமனை நிர்வாகம் அடாவடி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
private hospital dumping medical waste near a government school in Karur

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிக்குச் செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளது. மேலும், ஒரு பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கும் நிகழ்வும் ஏற்படுகிறது. 

இந்த நிலையில் கரூர் மாநகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் நூற்றுக்கணக்கான கண்ணாடி பாட்டில்கள் சாக்கு மூட்டையில் நிரப்பி அந்தக் குப்பை மேட்டில் தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும், அந்தத் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் விபரங்கள் அடங்கிய ஸ்கேன் சென்டர் சீட்டுகளும் சிதறிக் கிடந்தன.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த போது, மருத்துவமனை நிர்வாகம் நேரில் வந்து பேசுங்கள் என்று அலட்சியமாகப் பதில் அளித்ததாகக் குற்றம் சாட்டினர். மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்திருந்தும், அதை மதிக்காமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை கழிவுகளை வீசி சென்றதால், அவ்வழியாக செல்லக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், குடியிருப்பு பகுதி பொது மக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.