நடிகர் விஜய்நடிப்பில்உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தைதிரையரங்குகளில் வெளியிடவேதிட்டம் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, " 'மாஸ்டர்' திரைப்படத்தின்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்கில் வெளியாவதே தற்போதைய சூழலில் சரியாகஇருக்கும். ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் எனக்காத்திருக்கிறோம். ஓ.டி.டிதளத்தில் இருந்து எங்களைஅணுகியபோதும் திரையரங்கில் வெளியிடவேநாங்கள் விரும்புகிறோம். தமிழ்த் திரைப்படத்துறையை மீட்டெடுக்கதிரையரங்கஉரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'மாஸ்டர்' திரைப்படம் எப்போது, எதில்வெளியிடப்படும்என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.