Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழக சாலையைக் கடந்த பெரிய முதலை... 

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

The big crocodile that crossed the Annamalai University Road ...

 

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று (11/01/2021) அதிகாலை 4 மணிக்கு ரோஸ் பெண்கள் விடுதி அருகே உள்ள சாலையில் இருந்து, அதே பகுதியில் உள்ள இரட்டை குளத்திற்குப் பெரும் முதலை ஒன்று சென்றுள்ளது. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து அவர், இதுகுறித்து மற்ற நண்பர்கள் மற்றும் பொது மக்களுக்கு தகவல் கொடுத்தார். இதனையறிந்து, அரை மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட இடத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகமானது. இதனைத் தொடர்ந்து முதலையைப் பார்த்த பொதுமக்கள், அந்த இடத்தில் இருந்த குச்சிகளையும், புற்களையும்  முதலை கண் மீது போட்டனர். இதனால் முதலை நகராமல் அப்படியே படுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை லாவகமாக பிடித்து கை, கால்களைக் கயிற்றால் கட்டி, பொதுமக்களின் உதவியுடன் சிதம்பரம் அருகே உள்ள வக்காராமரி ஏரியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 

The big crocodile that crossed the Annamalai University Road ...

 

இதேபோல், சிதம்பரம் பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் கொள்ளிடம், பழைய கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் இருந்து சிதம்பரம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் முதலைகள் தஞ்சமடைந்துள்ளன. இவை அவ்வப்போது வெளியே வந்து பொதுமக்களை மிரட்டி வருகிறது. தற்போது ஒரு முதலை பிடிபட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நிம்மதி பெருமூச்சு ஏற்படுத்தியுள்ளது.  இன்னும் இதுபோல் பல நீர்நிலைகளில் முதலை இருப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். அதனையும் பிடிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.