Skip to main content

விரைவில் பிக் பாஸ் சீசன் 4... தொகுத்து வழங்க போகும் நடிகர் இவர் தான்? வெளிவந்த தகவல்! 

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

தனியார் தொலைக்காட்சியில் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை கடந்துள்ளது. பிக் பாஸ் மூன்று சீசன்களையும் நடிகரும், அரசியல்வாதியுமான கமல் தொகுத்து வழங்கினார். மூன்றாவது சீசனில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் மக்கள் மத்தியில் இயக்குனர் சேரன், கவின், லாஸ்லியா, தர்சன் மிகவும் சிறந்த போட்டியாளர்களாக கருதப்பட்டார்கள். மேலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் வெற்றி பெற்று 50 லட்சம் பரிசை வென்றார். இரண்டாம் இடத்தை நடன இயக்குனர் சாண்டி பிடித்தார். மூன்றாவது இடத்தை லாஸ்லியா கைப்பற்றினர்.
 

big boss



மேலும் தமிழில் நடிகர் கமல் தொகுத்து வழங்கியது போல் இந்தியில் சல்மான்கான், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நானி, நாகார்ஜூனா என பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த  நிலையில் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 வருகிற ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்த முறை தொகுத்து வழங்குவது சந்தேகம் என்கின்றனர். இதனால் அடுத்து வருகிற பிக் பாஸ் சீசனை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதோடு நடிகர்கள் சரத்குமார், சூர்யா, விக்ரம் ஆகியோர் பெயர்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தொலைக்காட்சி தரப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்படத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.