Skip to main content

பிக் பாஸ் லாஸ்லியாவிடம் சேரன் பற்றி கேட்கப்பட்ட கேள்வி... லாஸ்லியா கூறிய பதிலால் அதிருப்தி!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது சீசனில் முகேன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர்கள் கவின், லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா கலந்து கொண்ட போது அவர்களுக்கு கவின், லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது. பின்பு லாஸ்லியா,கவின் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர்கள்  என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் கவினுக்கும், பெண்கள் பிரிவில் லாஸ்லியாவிற்கும் விருது வழங்கியுள்ளனர். 
 

lossliya



அப்போது அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், பிக் பாஸ் லாஸ்லியாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்களும், இயக்குனர் சேரனும் தந்தை, மகள் போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தீர்கள். அதனால் உங்களிடம் அந்த கேள்வியை கேட்கிறேன் என்று இயக்குனர் சேரன் அவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா என்று கேட்டார். அதற்கு லாஸ்லியா எனக்கு சேரன் சாரோட பிறந்த நாள் எப்போது என்று தெரியாது என்று கூறினார். இது நிகழ்ச்சி பார்த்த அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் சேரன் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி அவர் வீட்டிற்கே சென்று நடிகை சாக்ஷி வாழ்த்தினார். ஆனால் மகள் போல் இருந்த லாஸ்லியாவிற்கு சேரன் பிறந்த தேதி கூட தெரியவில்லையே என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.    
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.