
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பதுபவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழைப் பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்துக் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.12 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடி 4,487 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மழைப்பொழிவு இல்லாததால் இன்று 711 கன அடி வீதமாகக்குறைந்து வருகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 550 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.77 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 12.95 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.19 அடியாகவும் உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)