சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் உள்ள தீவுத்திடலில் சிங்காரச் சென்னையில் உணவுத் திருவிழா என்ற தலைப்பிலான கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், பாரம்பரிய நெல், அரிசி, பருப்பு வகைகள் உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் 200 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் பீப் பிரியாணி இடம் பெறாதது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், உணவுத் திருவிழாவில் மூன்று பீப் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.