Skip to main content

திருச்சி அரசு மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி... அமைச்சர்கள் துவக்கிவைப்பு!

Published on 28/08/2022 | Edited on 28/08/2022

 

Battery car facility in Trichy Government Hospital... Ministers inaugurated!

 

திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில், நோயாளிகள் பயன்பாட்டிற்காக ரூபாய் ஆறு லட்சம் மதிப்பிலான பேட்டரி காரினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.

 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ,மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மருத்துவமனை முதல்வர் டாக்டர்.நேரு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், முக்கியப் பிரமுகர் க.வைரமணி மண்டலத் தலைவர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“என்னை வெற்றிபெறச் செய்தால் மக்களின் குரலாகப் பாராளுமன்றத்தில் ஒலிப்பேன்” - அருண் நேரு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arun Nehru says  if he makes me win, he will speak in Parliament as  voice of  people

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பகுதி கொசூர் கடைவீதியில்  பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு பொதுமக்களிடையே வாக்கு சேகரித்துப் பிரச்சாரத்தை கொசூரில் தொடங்கினார்.

பிரச்சாரத்தை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர், “கொசூர் பகுதியில் குடிநீர் பிரச்சனை நீண்ட காலமாக இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. நிச்சயமாக இந்த பகுதியினுடைய குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். எனவே திமுக வேட்பாளர் அருணுக்கு வாக்களியுங்கள் என்றார்”. அதைத் தொடர்ந்து வேட்பாளர் அருண் நேரு உற்சாகமாகத் தனது பிரச்சாரத்தை கொசூரில் தொடங்கி, மத்தகிரி, தொண்டமாங்கினம், போத்துராவுத்தன்பட்டி, சிவாயம், பாப்பாக்கப்பட்டி, பஞ்சப்பட்டி ஊராட்சி காகம்பட்டியில் தனது பிரச்சாரத்தை முடித்தார்.

Arun Nehru says  if he makes me win, he will speak in Parliament as  voice of  people

முன்னதாக 16 இடங்களில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது, வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது:- கழகத்தின் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எண்ணிலடங்கா சாதனைகளை செய்திருக்கிறார். உங்களின் உற்சாக வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை போன்ற இளைஞர்களை வெற்றி பெறச் செய்தால் இந்த பகுதி மக்களுடைய குரலாக இருந்து பாராளுமன்றத்தில் உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  பாடுபடுவேன். மேலும்,  கொசூர் பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அதனை அவர் நிறைவேற்றுவார்.

பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கோரிக்கையை நிறைவேற்றுவேன்” என்றார்.

பிரச்சாரத்தின் போது குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டக் குழு துணைத்தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை ஒன்றியச் செயலாளர் சந்திரன், குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இல. கரிகாலன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநிலச் செயலாளர் கேப்டன் சுபாஷ்ராமன் மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.