
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வீச்சரிவாளுடன் திருமணத்திற்கு வாழ்த்துப் பதாகைவைத்த ராணுவ வீரர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராணுவத்தில் பணியாற்றிவரும் வடமலாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சங்கரன்கோவிலில் நடைபெற்றஉறவினர்களின் திருமணத்திற்கு வந்த நிலையில், அவர் மணமக்களைவரவேற்பது போன்று ஃப்ளக்ஸ்பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் ராணுவ வீரர் சுரேஷ் வீச்சரிவாளுடன் நிற்கும் படம் இடம்பெற்றிருந்தது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும்விதமாகஇந்த வாழ்த்து பேனர் இருந்ததாகபோலீசாருக்கு இதுகுறித்து தகவல் போக, வீச்சரிவாளுடன்போஸ் கொடுத்த ராணுவ வீரர் சுரேஷ், அதை அச்சிட்ட கிருஷ்ணா ப்ரிண்டர்ஸ் உரிமையாளர் சங்கரநாராயணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து, சர்ச்சை பேனர் குறித்துவிசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)