Skip to main content

சூறை காற்றால் சாய்ந்த வாழை சாகுபடி... கிட்டதட்ட 50,000 மரங்கள் விழுந்தன!!! விவசாயிகள் வேதனை!!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020
 Banana Cultivation in erode

 

கடும் வறட்சி என்றாலும், அதிக மழைப்பொழிவு என்றாலும் பாதிப்பு என்னவோ பரிதாபத்துக்குரிய விவசாயிகளுக்குத்தான். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் சூறைக் காற்று வீசியதால் அங்கிருந்த 50,000 வாழை மரங்களும் அடியோடு சாய்ந்தது. இந்த வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


செவ்வாழை முதல் பலதரப்பட்ட வாழைப்பழங்கள் பயிரிடப்பட்டு முழுமையாக அறுவடை நடக்க இருக்கும் நிலையில், நேற்று பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்திருக்கிறது. ஏற்கனவே கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில், சாகுபடிக்கு தயாராக இருந்த வாழைப் பழங்களை வெட்டி விற்பனை செய்ய முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேதனையில் இருந்தனர்.

 

 

 Banana Cultivation in erode

 

அவர்களுக்குள் தங்களின் உழைப்பின் மூலமாக விளைந்த அந்த வாழை மரங்களால், தங்களுக்கு கொள்முதல் விலையை கூட கொடுக்க முடியாமல் போய்விட்டது என்ற கவலை இருந்தது. இந்தநிலையில் தற்போது விற்பனைக்கு தயாராக கொண்டு செல்ல இருந்த பழங்கள், சூறைக்காற்றால் மரங்களோடு சாய்ந்திருக்கிறது. இதனால் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலையுடன் தெரிவிக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் தனிநபர் பயிர் பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பதோடு, தற்போது இழப்புக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அரசு நிவாரணம் மூலம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

தேர்தல் புறக்கணிப்பு; ஈரோட்டில் பரபரப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Erode, people hold banners saying they are going to boycott the elections

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு உள்ள ஒரு சில பகுதிகளில், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சனைகளைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்து வருகின்றனர். அதன்படி ஈரோடு கொல்லம்பாளையம் பண்ணை நகர் பகுதியில் இன்று சாலையோரம், ஊர் பொதுமக்கள் சார்பாக தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைக்கப்பட்டது. அப்போது, சாலையோரம் சென்ற வாகன ஓட்டிகள் இந்தப் பேனரை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய இந்தப் பேனரில் பொதுமக்கள் கூறியிருப்பதாவது, “ஈரோடு கொல்லம்பாளையம் பண்ணை நகரில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு தனிநபர் ஒருவர் பொது வழி பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதைக் கண்டித்து நாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் கிட்டத்தட்ட 6 மாதமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதனைக் கண்டித்து வருகிற பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என எழுதப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி அந்தப் பகுதி முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. இதனை அடுத்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பேனர் குறித்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.