Bail to TfF Vasan

விதிமுறைகளை மீறிகார்ஓட்டியதாகச்சர்ச்சைக்குரியயூடியூபர்டிடிஎஃப்வாசன் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கரவாகனத்தைச்செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுப்பல நாட்கள்சிறைத்தண்டனைக்குப்பிறகுடிடிஎஃப்வாசன் வெளியே வந்திருந்தார். அவர் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காமல் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என நிபந்தனையோடு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதிசென்னையில் இருந்துதிருச்செந்தூர் நோக்கி நண்பர்களுடன்டிடிஎஃப்வாசன்காரில்சென்றுள்ளார். அப்பொழுது மதுரைவண்டியூர்சுங்கச்சாவடி அருகேசெல்போனில்பேசியபடியே காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதையூடியூப்சேனலில்பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்தச் சம்பவம் தொடர்பாக மணி பாரதி என்பவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில், மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கவனக்குறைவாக செல்போனைப் பயன்படுத்தியபடி வாகனத்தை இயக்குதல்; அஜாக்கிரதையாக கார் ஓட்டியது; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீண்டும் அவரை கைது செய்துள்ளனர். சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனை மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

Bail to TfF Vasan

இதனையடுத்து மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில், “டிடிஎஃப் வாசன் தொடர்ச்சியாக இதுபோன்று செயல்படுகிறார். ஏற்கெனவே அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான சாகசமும் செய்ய மாட்டேன் என எழுதிக் கொடுத்துள்ளதால் டிடிஎஃப் வாசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வாதம் முன்வைக்கபட்டது. இவ்வாறு இரண்டு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் விசாரணை மதியம் 02.40 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது டிடிஎஃப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “டிடிஎஃப் வாசன் வளரும் இளைஞர், படத்தில் நடிக்கவும்உள்ளார். அதுமட்டுமல்லாமல்வீடியோவுக்கு மன்னிப்பு கூட கேட்கிறோம். மேலும்தலைக்கவசம் வழங்குவது, மழை வெள்ளத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட நற்பணிகளைசெய்துள்ளார்” எனத் தெரிவித்தார். இது குறித்துடிடிஎஃப் வாசன் கூறுகையில், “நான் காரை வேகமாக ஓட்டவில்லை. என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது திருந்தி வாழ்ந்து வருகிறேன்” எனத் தெரிவித்தார். அரசுத்தரப்பு வாதிடுகையில், “கார் ஓட்டுநர் உரிமம் பெற எல்.எல்.ஆர் (LLR) மட்டுமே வைத்துள்ள வாசன், தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும் உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உறுதிமொழி பத்திரம் வழங்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

Advertisment