பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யச் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

அதனடிப்படையில் தொடர்ந்து பலர் இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் பேரணி நடத்தினர். இதில் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவி பொற்கொடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு எதிராக கோஷங்களை கட்சியினர் எழுப்ப, பொற்கொடி கண்ணீருடன் கலங்கி நின்றார்.

படங்கள்:எஸ்.பி.சுந்தர்