Bag left unattended; Police investigation

Advertisment

பெரம்பலூரில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருபதுக்கு மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் இருந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே இலங்கை அகதிகள் முகாம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 80க்கும் மேற்பட்ட மக்கள்அங்கு வசித்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையத்திற்கும் அகதிகள் முகாமிற்கும் இடையே உள்ள அரசு மதுபானக்கடையின் பின்புறம் உள்ள பயன்படாத காலி நிலம் இருக்கிறது. அந்த பகுதியில் கருப்பு நிற பேக் ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது.

இதனைப் பார்த்த அகதிகள் முகாமில் வசிக்கும் நபர் ஒருவர் எடுத்துள்ளார். உள்ளே பார்த்தபோது அதில் சுமார் 20க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பையைக் கைப்பற்றி நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இதனைக் கொண்டு வந்தது யார்; எதற்காக இங்கு கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாகத்தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.