Skip to main content

கிணற்றில் விழுந்த யானை குட்டி; மீட்கப் போராடும் வனத்துறை!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
A baby elephant that fell into a well; Forest Department struggling to recover

நீலகிரியில் கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் அதிகப்படியாக உலா வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பந்தலூர் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று இரவு யானை கூட்டம் ஒன்று வந்துள்ளது.

அப்பொழுது கூட்டத்திலிருந்த குட்டி யானை 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதனால் உடன் வந்த யானைகள் சத்தமிட்டது. இரவு முழுக்க குட்டி யானை கிணற்றுக்குள் கிடந்தது. யானைக் கூட்டமும் அங்கிருந்து நகராமல் சத்தமிட்டுக்கொண்டே இருந்தது. யானை கூட்டத்தின் சத்தம் ஊர் மக்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது.

என்ன நடந்தது என அந்த பகுதி மக்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் காலையில் சென்று பார்த்த பொழுது கிணற்றுக்குள் குட்டி யானை விழுந்தது தெரிந்தது. உடனடியாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைக் கூட்டங்களை விரட்டி விட்டு தற்பொழுது குட்டி அணையை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  முதற்கட்டமாக ஜேசிபி உதவியுடன் யானை குட்டியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடர் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Continuous heavy rain; Holiday notification for schools

தமிழகத்தில் கடந்த மே,  ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக உதகை, குன்னூர், குந்தா மற்றும் கோத்தகிரி ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (22.07.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் மானவர்கள் மற்றும் மாணவியர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு;  முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
CM MK Stalin obituary for Boy drowned in river incident 

நீலகிரி மாவட்டம் சேரங்கோடு கிராமம் பாலவயல் பகுதியிலுள்ள பொன்னானி ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் நெல்லியாளம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் குணசேகரன் (வயது 18). இவர் நேற்று (20.07.2024) பிற்பகல் 01.30 மணியளவில் சேரங்கோடு கிராமம் பாலவயல் பகுதியிலுள்ள பொன்னானி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.