Skip to main content

வி.எம்.சிங்கை கண்டிக்கும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு!!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

Ayyakkannu, the leader of the agricultural union, condemns VM Singh !!

 

திருச்சியில் நடைபெற்ற மாநில விவசாயிகள் சங்க கூட்டத்தில் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

 

அப்போது, "விவசாயிகள் தொடர்ந்து போராட்டக்களத்தில் நிற்கும் நிலையில் டிராக்டர் பேரணியில் டெல்லி போலீஸ் நடந்துகொண்ட அராஜகமான செயலை கண்டித்து பல்வேறு விவசாயச் சங்கங்களும் பல்வேறு தலைவர்களும் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், அகில இந்திய கிசான் சங்கர்சல் கோ ஆடினேட் கமிட்டியில், டெல்லி காந்தி அமைதி கட்டிடத்தில் நடந்த கூட்டத்தில், 20 அமைப்பாளர்களை இந்த கமிட்டியில் சேர்த்து ஒரு கூட்டு நடவடிக்கை குழுவாக ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.

 

இதில் வி.எம். சிங் என்ற சட்டமன்ற உறுப்பினரும் அமைப்பாளராக இருக்கிறார். 20 அமைப்பாளர்களில் ஒருவராக இருக்கக்கூடிய அவர், '3 வேளாண் சட்டத்தை திரும்பப்பெற நடக்கும் போராட்டத்தில், இந்த கமிட்டி கலந்து கொள்ளாது' என்று அறிவித்து இருப்பதை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

 

20 அமைப்பாளர்கள் அடங்கிய இந்த கூட்டு நடவடிக்கை குழுவில் தன்னிச்சையாக தன்னுடைய அறிக்கை கொடுத்து யாரிடமும் கலந்தாலோசனை செய்யாமல் இப்படிப்பட்ட ஒரு தகவலை கொடுத்திருப்பது கண்டனத்துக்குரியது என்றும் ஒருபோதும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் தொடர்ந்து விவசாயிகளுடைய போராட்டம் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்றும் இதன் மூலம் தெரிவிக்கிறோம்" என்றார்.

 

மேலும், மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஒன்றுசேர்ந்து திருச்சியிலிருந்து புறப்பட்டு டெல்லிக்குச் சென்று அங்குத் தற்கொலை போராட்டத்தை நடத்துவதற்கு எங்களைத் தயார்செய்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார். 

Next Story

சர்ச்சையில் சிக்கிய ஆ. ராசா; பா.ஜ.க கடும் கண்டனம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
BJP strongly condemned on A. Rasa, caught in controversy again

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார்.

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் எனக் கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, சமீபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியா ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை. இந்தியா ஒரு துணைக் கண்டம். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்று பிரதமர் கூறுகிறார். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால், இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழ்நாடு தனியாகப் போய்விடும். 

நீங்கள் சொல்லுகின்ற ஜெய் ஸ்ரீராமையும், ‘பாரத் மாதா கி ஜே’யையும் நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கூறியிருந்தார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

ஆ. ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இந்தியாவின் அடையாளத்தை இழிவுபடுத்துவதும், இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் இந்து கடவுள்களை அவமதிப்பதும் இந்தியா கூட்டணியின் அரசியல் செயல்திட்டமாக மாறி வருகிறது. ஆ. ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரஸும், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.