ax

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்தை அடமானம் வைத்து 1350 கோடி கடன் வழங்க வங்கிக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கலாமின் அக்கினி சிறகுகள் அறக்கட்டளை செயலாளர் செந்தில் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்தில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை ஐ.ஜி- 3 இன்போ என்ற தனியார் நிறுவனம், அடமானமாக வைத்து, ஆக்ஸிஸ் வங்கியில், 1,350 கோடி ரூபாய் கடன் பெற முயற்சிப்பதாகவும், அந்த அடமான பத்திரம் பதிவுக்காக சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்த அடமான பத்திரத்தை பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.