Skip to main content

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களை வைத்து நடமாடும் பால்வண்டி... ஆவினின் புதிய முயற்சி!!   

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
 Auto, taxi drivers, moving milk cart ... Avin's company is a new venture!

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 6,472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6,423 பேர் தமிழகத்திலும், மற்றவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இன்று ஒரே நாளில் 60,375 பேருக்கு  கரோனா  பரிசோதனை செய்ததில் இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக, பல்வேறு கட்ட பொதுமுடக்கத்தால் பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால்வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் நிறுவனம் புதிய முயற்சி எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை தற்பொழுது ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலீஸ் தாக்கியதில் கால் டாக்ஸி ஓட்டுநர் உயிரிழப்பு; தலைமை காவலர் கைது

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Policeman arrested in case of Call Taxi driver case in Chennai

சென்னை மதுரவாயல் அருகே காவலர் தாக்கியதில் கால் டாக்ஸி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கால் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வானகரம் சர்வீஸ் சாலையில் ஒரு பெண்ணுடன் ராஜ்குமார் பேசிக் கொண்டு நின்றுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரவாயல் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் ரிஸ்வான் ஓட்டுநர் ராஜ்குமாரிடம் விசாரித்துள்ளார்

அப்போது காவலர் ரிஸ்வானுக்கும் ஓட்டுநர் ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு வாக்குவாதம் முற்றிய நிலையில் காவலர் ரிஸ்வான் ஓட்டுநர் ராஜ்குமாரின் நெஞ்சில் மிதத்தாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்குமாருடன் பேசிக்கொண்டிருந்த பெண் காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியின் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மயங்கி விழுந்த ராஜ்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வைத்துள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஓட்டுநர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  ஆனால், ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த ராஜ்குமாரின் குடும்பத்தார் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் மதுரவாயல் தலைமை காவலர் ரிஸ்வானை போலீசார் கைது செய்துள்ளனர். ஓட்டுநர் ராஜ்குமார் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், காவலர் ரிஸ்வான் தாக்கியதால்தான் ஓட்டுநர் ராஜ்குமார் இறந்த்து தெரியவந்ததையடுத்து, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.