Skip to main content

‘பயணிகள் கவனத்திற்கு’ - சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Attention Passengers Chennai MTC Important Notice 
கோப்புப்படம்

சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள வாணுவம்பேட்டை - மேடவாக்கம் கூட்ரோடுக்கு இடையே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, அப்பகுதியில் சென்னை மாநகர் பேருந்து போக்குவரத்தில் மாற்றங்களைச் செய்து போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது . மேலும் இந்த மாற்றங்கள் இன்று (24.07.2024) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே  மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் (Metro Stations) அமைத்திட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல மெட்ரோ நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Attention Passengers Chennai MTC Important Notice 

தற்போது கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட தடம் எண்.18டி, 18பி, எம்1, 45ஏசிடி ஆகிய பேருந்துகள் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது. தடம் எண்.14 எம் பேருந்து மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு இயக்கப்பட்ட பேருந்து நாளை முதல் மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி, வழியாக கிண்டி ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளது. மேலும், தடம் எண். எஸ்14 எம் மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை, மடிப்பாக்கம் கூட்ரோடு, வாணுவம்பேட்டை வழியாக என்ஜிஒ காலனி பேருந்து நிலையத்திற்கு 14எம் வழித்தடத்திலேயே 25 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.

தடம் எண்.எம்1 சிடி கீழ்கட்டளை பேருந்து நிலையத்திலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது. தற்போது தடம் எண்.76, 76பி, வி51, வி51எக்ஸ் ஆகிய வழித்தட பேருந்துகள் மேடவாக்கம் கூட்ரோடு, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.

Attention Passengers Chennai MTC Important Notice

மேலும் கீழ்கட்டளையிலிருந்து மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட எம்18சி, 18என் மற்றும் என்45பி வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட உள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்