/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/memu-beach-art_2.jpg)
பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் அனைத்தும் எழும்பூரில் இருந்து நாளை (14.07.2024) இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மின்சார ரயில் பயணிகள் நலன் கருதி சென்னை கடற்கரை முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை நாளை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை (14.07.2024) தென்னக ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mtc-bus-art-chennai-central--background_3.jpg)
பயணிகள் நலன் கருதி மாநகர் போக்குவரத்துக் கழகம் கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்கப்படவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)