nn

காருக்கு வழிவிடாததால் மதபோதகர் ஒருவரை முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் தரப்பு தாக்கியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கட்சி நிகழ்ச்சிக்காகமுன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் வரும் பொழுது அவருடைய காருக்கு வழிவிடாமல் சென்றதாக மத போதகர் ஜெகன் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்களின் தூண்டுதலின் பேரில் அவருடைய ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ள மத போதகர் ஜெகன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

nn

Advertisment

அவரை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மதபோதகர் கொடுத்த புகாரின்அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி ஆகிய 15 பேர் மீது முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.