Skip to main content

நக்கீரன் முதன்மை நிருபர் மீது தாக்குதல்-சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

Published on 19/09/2022 | Edited on 20/09/2022

 

Attack on Nakeeran Chief Correspondent-Chennai Journalists Forum Strongly Condemns

 

கள்ளக்குறிச்சி அருகே செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜித் ஆகியோர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு  சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ்  இன்று (19-09-2022) கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின் தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார் மீதும், பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம்; ஆட்சியர் அதிரடி !

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
11 tahsildar transferred in Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். சின்னசேலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட  வட்டாட்சியர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ஏற்கனவே இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரையும் பணியிடை மாற்றம் செய்த நிலையில் தற்போது புதிய ஆட்சியர் 11 வட்டாட்சியர்களை மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ரூ.11 லட்சம் மதிப்பிலான பணத்தால் சுவாமிக்கு அலங்காரம்; ஆச்சர்யமடைந்த பக்தர்கள்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Swami was decorated with money worth Rs.11 lakh

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிவன் கோவிலில் இன்று மாலை வாராகி அம்மனுக்கு சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பதினோரு லட்சம் மதிப்பிலான பணத்தாலும் நகைகளாலும் அம்மன் சிலை முழுவதும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்து விளக்கு ஏற்றியும் வாழை இலையில் அரிசி தேங்காய் மஞ்சள் வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வைத்து தீபம் ஏற்றப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தச் சிறப்பு விளக்கு பூஜையில் கலந்து கொண்டார்.

10 நாட்களுக்குள் நினைத்த காரியங்கள் அனைத்தும் உடனடியாக நிறைவேறும் என்றும், ஜாதக ரீதியான தோஷங்கள் தொழில் பிரச்சனைகள் எதிரி தொல்லைகள் கண் திருஷ்டி குழந்தை இல்லாத தம்பிகளுக்கு ஒரு குழந்தை கிடைக்கும் கடன் பிரச்சினை தீரும் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தப் பூஜையில் மந்திரங்கள் முழங்க அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.