Skip to main content

ஏமாற்றிய காதலியை கத்தியால் குத்திய காதலன்!

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள நகர் கிராமத்தை சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அசோனா (20).  இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சரோஜினி நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.  

அசோனா வழக்கம் போல  வேலைக்கு செல்லும் போது பைக்கில் முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்மநபர், கத்தியால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தவரை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 

Beloved boyfriend with a knife cheated!

துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் இளம்பெண்ணை கத்தியால் குத்திய மர்மநபரை கைது செய்தனர்.  விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கொங்கராயம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தவசீலன் என்பவரின் மகன்  பிரபாகரன் என்றும், இவரும் அசோனாவும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், கோயிலில் மாலை மாற்றிக்கொண்டதாவும், இரு வீட்டு பெரியவர்கள் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும்  அசோனாவை வேலைக்கு போகக்கூடாது, படிக்க வைக்கிறேன் என்று கூறிய நிலையில் அசோனா மீறி வேலைக்கு சென்றதாலும், தன்னுடன் பேசுவதை தவிர்த்ததாலும்  ஆத்திரமடைந்து  பயமுறுத்துவதற்காகவே கத்தியால் கீறினேன் என கூறியுள்ளார். பிரபாகரனை கைது செய்த செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

காட்டிக்கொடுத்த மனைவி; சிக்கிய கணவர்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
wife complaint against her husband who grew cannabis plants at home

ஆந்திர மாநிலம் தச்ஷாராம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் (36). இவர் ஆந்திர மாநிலம் ராஜ் மன்றி பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு வந்து அங்கேயே ஹோட்டல் வைத்து  இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சிவபிரசாந் கஞ்சாவிற்கு அடிமையாகி தினமும் கஞ்சா அடித்து விட்டு ஜான்சியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

சிவபிரசாந்தின் தொந்தரவு தாங்காமல் ஜான்சி கணவர் பிரசாந்த் மீது மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் இருவரையும் அழைத்து வைத்து சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் ஏலகிரி மலையிலிருந்து ஜோலார்பேட்டை அடுத்த இடையப்பட்டி பகுதிக்கு கடந்த மே மாதம் குடியேறினர்.

இருந்த போதிலும் சிவபிரசாந்த் கஞ்சா அடிப்பதை நிறுத்தாமல் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடிகளை நட்டு வைத்து அவருக்கு தேவைப்படும் நேரத்தில் கஞ்சாவை பறித்து  அதனை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் தினமும் மனைவியிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அதனை தொடர்ந்து வீட்டில் காஞ்சா செடியை வளர்த்து வருவதை கண்டுபிடித்த ஜான்சி இது குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜோலார்பேட்டை உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வளர்த்து வந்த 5 கஞ்சா செடியைப் பறிமுதல் செய்து சிவபிரசாந்த்தை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். இது தொடர்பாக சிவபிரசாந்தின் மனைவி ஜான்சி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சிவபிரசாந்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கஞ்சா அடிப்பதற்காக தானே வீட்டின் பின்புறம் காஞ்சா செடிகளை வளர்த்து காஞ்சா அடித்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

6 வருடக் காதல்.... இளம்பெண்ணை ஏமாற்றிய காதலனின் குடும்பம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
family of the boyfriend who cheated on the young girl in Coimbatore!

கோவை செல்வப்புரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கோவையைச் சேர்ந்த இளைஞரைக் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே நெருக்க அதிகமானதால் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். அதன் காரணமாக இளம்பெண் 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனைத் தொட்ர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை அந்த பெண் வற்புறுத்தி வந்துள்ளார். இது காதலனின் வீட்டிற்கு தெரியவர, அவரது பெற்றோர் கருவைக் கலைத்தால் தனது மகனுடன் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இளைஞரின் பெற்றோர் சொன்னதை நம்பி தனது வயிற்றில் வளர்ந்த கருவை அந்த பெண் கலைத்துள்ளார். ஆனால் அந்த இளைஞருக்கு வேறு ஒரு பெண்ணுடன் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதானல் மனவேதனை அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கண்ணீர் மல்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த இளம்பெண், “காதலித்து திருமணம் செய்து கொள்வதாக இளைஞர் என்னை ஏமாற்றி விட்டார். எனது நிலை குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் காதலித்த இளைஞர் என்னையும், எனது குடும்பத்தையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இது குறித்து புகார் அளித்தாள் இருவரும் காதலித்த காலங்களில் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டுகிறார். இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுக் கொடுத்துள்ளார்.