Attack on former minister MR Vijayabaskar's car

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கார் நடுசாலையில் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதிமுகவில் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விஜயபாஸ்கர் இருக்கிறார். இந்நிலையில் கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரைக் கூட்டிக்கொண்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அந்த கார் மீது சில மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

Advertisment

அப்போது காரில் அமைச்சருடன் பயணித்த துணைத் தலைவர் வேட்பாளரை சிலர் கடத்தி செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கடத்திச் செல்லப்பட்ட வேட்பாளரை மீட்டுத் தரும்படி கோரிக்கை வைத்தார். அதிமுக சார்பிலும் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.