Published on 13/11/2018 | Edited on 13/11/2018

கோவை இரயில் நிலையம் அ௫கில் உள்ள ஏ.டி.எம். மையத்தின் உள்ளே வாலிபர் ஒருவர் மது அருந்திவிட்டு நிம்மதியாக உறங்குகிறார். பணம் எடுக்க வருபவர்கள் அவரை தாண்டி சென்று பணம் எடுத்து சென்றனர். பெண்கள் சிலர் இந்தக் காட்சியை பார்த்துவிட்டு பணம் எடுக்காமலேயே திரும்பிச் சென்றனர். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இனி இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா என்றனர் ஏ.டி.எம். மையத்திற்கு வந்த வங்கி வாடிக்கையாளர்கள்.