Assembly session begins early

தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டம் 2024 ஜூன் மாதம் 24 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே ஜூன் 20 ஆம் தேதியே தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தாரகை கத்பர்ட் நாளை (12.06.2024) சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால் பேரவை முன்கூட்டியே தொடக்கப்படுகிறது எனவும், மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக ஜூன் 20 இல் சட்டப்பேரவை தொடங்க உள்ளதாகவும்சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.