Skip to main content

'யார் உங்கள் பிரதமர் வேட்பாளர் என்று கேளுங்கள்?' - டி.டி.வி.தினகரன்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'Ask who is your prime ministerial candidate?'-TTV Dinakaran speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டி பகுதியில் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''சாதம் வடிக்க வேண்டும் என்றால் குக்கரில் தான் வடிக்க வேண்டும். குக்கரை பார்த்த உடனே டிடிவி தினகரன் ஞாபகம் வர வேண்டும். இந்த முறை என்னை வெற்றிபெறச் செய்வீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் குக்கர் ஜெயிக்கணும். எப்படி ஆர்கே நகரில் ஜெயிச்சு டெபாசிட் போக வைத்ததோ அப்படி பணம், காசு எல்லாவற்றையும் தாண்டி குக்கர் ஜெயிக்க வேண்டும்.

இன்னும் சில பேர் ஓட்டு கேட்க வருவார்கள். மோடி தான் இந்தியாவிற்கு மூன்றாவது முறையாக பிரதமராக வர இருக்கிறார். இந்த தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல். யார் இந்தியாவுடைய பிரதமர் என்பதற்கான தேர்தல். இந்த தேர்தலில் மோடிதான் எங்களுடைய பிரதமர் என்று ஓட்டு கேட்கலாம். மற்ற கூட்டணிகள் யாரைச் சொல்லி ஓட்டு கேட்கப் போகிறது? உதயசூரியனில் யாரைச் சொல்லிக் கேட்க போகிறார்கள்? நீங்கள் வந்தால் கேட்க வேண்டும். உங்களுக்கு யாருப்பா பிரதமர் வேட்பாளர் என்று கேட்க வேண்டும். இன்னொரு கட்சி இரட்டை இலையை தூக்கிக்கொண்டு வரும். அவங்க என்ன பழனிசாமியை பிரதமராக்க போறாங்களா?  திமுக வேட்பாளர் கூட எத்தனை அமைச்சர்கள் வந்தாலும் அவர்களிடம் கேளுங்கள் யார் உங்க பிரதமர் வேட்பாளர் என்று, ஜனநாயக நாட்டில் கேட்கலாமே?''என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இதுவே கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது'-அதிர்ச்சி கொடுத்த ஜோ பைடன்

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 'I hope this is good for the party and the country' - shocked Joe Biden

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக இருந்தது. இந்நிலையில் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 'மிஞ்சியிருக்கும் தனது பதவி காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளை நிறைவேற்றுவேன்; இதுவே எனது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன்' என அறிக்கை வாயிலாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Next Story

தொடங்கிய இடத்திலேயே 'பிக்பாக்கெட்'; சசிகலா கூட்டத்தில் அதிர்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Pickpocket right where the tour starts; shocked the Sasikala crowd

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா எனப் பல தரப்புகளும் பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், அதேபோல் சசிகலா தரப்பும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக இரண்டாவது முறையாக 'அம்மா வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் மீண்டும் சுற்றுப் பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். தென்காசி அடுத்த காசிமேசபுரத்தில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சுற்றுப் பயணம் தொடங்கிய இடத்திலேயே பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் 5 பேரிடம் மர்மநபர் ஒருவர் பிக்பாக்கெட் அடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் வந்த சசிகலாவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். இதனால் அங்கு பொதுமக்கள் கூடியதோடு செய்தி நிறுவனங்களின் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் செய்தியாளர்கள் மற்றும் மக்களிடமிருந்து மர்ம நபரால் பணம், நகை, பர்ஸ் ஆகியவை பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிக்பாக்கெட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.