Skip to main content

'கவர்னர் வேலைய மட்டும் அந்த அம்மாவை பார்க்கச் சொல்லுங்க'-அமைச்சர் சேகர்பாபு காட்டம்

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
'Ask the governor to see that only' - Minister Sekar babu angry

சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் பொழிந்த அதீத கன மழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியது. தற்பொழுது படிப்படியாக மீண்டு வருகிறது.

மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரண நிதி கோரியிருந்தது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த சில கருத்துக்கள் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எதிர்ப்பு  தெரிவித்திருந்தனர்.

இன்று தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடச் சென்ற புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இங்குள்ள திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறி உள்ளது. நான் நேரடியாக முதல்வரை பார்த்து கேட்கிறேன். 18ஆம் தேதி இங்கே மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் பொழுது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்க வேண்டுமா? அல்லது 'மக்களோடு முதல்வர்' என்று கோயம்புத்தூரில் நிகழ்ச்சி நடத்த வேண்டுமா?

'Ask the governor to see that only' - Minister Sekar babu angry

அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. கூட்டணிக் கட்சிக்காக சென்றுவிட்டார். பிரதமரை பார்ப்பதற்காக தான் டெல்லி போனேன் என்கிறார்கள். அப்போது கூட்டணி கட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்ளாமல் போனீர்களா? மாநில அரசு நிச்சயமாக இதனைக் கையாள்வதில் தோல்வி அடைந்திருக்கிறது.

முதலமைச்சர் இன்னொன்று சொல்கிறார்.'சென்னை மக்களை எப்படி மீட்டு எடுத்தோமோ அதேபோல தென்பகுதி மக்களை மீட்டெடுப்போம்' என்கிறார். சென்னையை நீங்கள் மீட்டெடுக்கவில்லை. சென்னை மக்கள் தாங்களாகவே மீண்டு எழுந்தார்கள்'' என்றார்.

'Ask the governor to see that only' - Minister Sekar babu angry

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது தமிழிசை சௌந்தரராஜன்  பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,  ''பாண்டிச்சேரியுடைய கவர்னர் வேலையை அந்த அம்மாவை பார்க்கச் சொல்லுங்கள். பாஜகவினுடைய செய்தி தொடர்பாளராக மாற வேண்டாம் என சொல்லுங்கள். அவர்களுக்கு இருக்கின்ற பணியை அவர்களை பார்க்கச் சொல்லுங்கள். அவர்களுடைய எதிர்கால திட்டம் தமிழகத்தில் எங்காவது பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட வேண்டும் என்பது. நிச்சயமாக எங்கு போட்டியிட்டாலும் ஏற்கனவே தமிழகம் மக்கள் அவருக்கு தோல்வியை தான் பரிசாக கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் தோல்வியை தான் பரிசாக தருவார்கள். ஆகவே பாண்டிச்சேரிக்கு உண்டான கவர்னர் அந்த பொறுப்பிற்கு உண்டான பணிகளை மேற்கொண்டால் நல்லது'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'ஒரு மாதத்தில் திரும்பத் தந்து விடுகிறேன்' - கடிதம் எழுதிவைத்துவிட்டு கொள்ளை

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
 'I will give it back in a month' - robbery after writing a letter

'உங்கள் வீட்டில் கொள்ளையடித்த பணம், நகைகளை ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன்' எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் ஊராட்சி ஐந்தாவது வார்டு பகுதியில் வசித்து வருபவர் சித்திரைச் செல்வன். சென்னையில் உள்ள தன்னுடைய மகனைப் பார்க்க வேண்டும் என்பதற்காக  சித்திரைச் செல்வனும் அவரது மனைவியும் சென்றுள்ளனர். வீட்டின் சாவியை அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வி வீட்டை சுத்தம் செய்ய வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக சித்திரச் செல்வனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறை நடத்திய விசாரணையில் பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.

 'I will give it back in a month' - robbery after writing a letter

மேலும் அங்கு ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது. அதில் 'என்னை மன்னித்து விடுங்கள் நான் இன்னும் ஒரு மாதத்தில் கொள்ளையடித்த பணம், நகையைத் திரும்ப தந்து விடுகிறேன். என் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லை' என எழுதப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

''விஜய்யின் குரல் வலுவானது அல்ல; வருந்தத்தக்கக் குரல்'' - தமிழிசை கருத்து

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'Vijay's voice is not a strong voice; Regretful voice'-tamizhisai comment

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேடை ஏறிய நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற தொடங்கினார். அவர் உரையில், ''கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி நீட் எக்ஸாம் நடந்தது. அதில் சில குளறுபடிகள் எல்லாம் நடந்ததா செய்திகள் எல்லாம் பார்த்தோம், படித்தோம். அதன் பிறகு என்ன ஆகிவிட்டது என்று பார்த்தால் நீட் தேர்வுக்கு மேலே இருக்கின்ற நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய்விட்டது. இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை என்பதை நாம் செய்திகள் மூலம் தெரிந்து கொண்ட விஷயம். சரி இதற்கு என்னதான் தீர்வு, நீட் விலக்குதான் தீர்வு. தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதைச் சீக்கிரமாக சால்வ் பண்ண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு  நிரந்தர தீர்வுதான் என்ன என்று கேட்டால் கல்வி வந்து பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிக்கல் இருக்கு என்றால் ஒரு இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப்பட்டியல் என்று உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தைச் சேர்க்க வேண்டும். இப்பொழுது இருக்கிற பொதுப்பட்டியலில் என்ன பிரச்சனை என்றால் அதில் உள்ள துறைகள் எல்லாம் பார்த்தால் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய பரிந்துரையைச் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். இதுதான் என்னுடைய தனிப்பட்ட ஒரு கருத்து நீட்டைப் பற்றி'' என்றார்.

'Vijay's voice is not a strong voice; Regretful voice'-tamizhisai comment

நடிகர் விஜய்யின் நீட் பற்றிய பேச்சு குறித்து தனியார் சேனலுக்கு தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், ''இது வலுவான குரல் அல்ல வருந்தத்தக்க குரல் என்று நான் சொல்கிறேன். எல்லாரும் சொல்கிறார்கள் என்பதற்காக மாணவர்களுக்கு நன்மை தருகின்ற ஒரு திட்டத்தை வெளியே தள்ள முடியாது. சட்ட விதிகளுக்குள் பேசினால் சுப்ரீம் கோர்ட் ஆர்டர். விஜய் 3 விஷயங்களை சொல்லி இருக்கிறார். நீட் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பட்டியல் இன  மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது என்று சொல்லியுள்ளார். அதை நான் மறுக்கிறேன். நீட்டில் எல்லா இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது. இரண்டாவது சிலபஸ்-ஐ வைத்து சொல்லி இருக்கிறார். நீட்டில் எல்லா சிலபஸ்ஸும் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது கல்வி மாநிலப் பட்டியலில் 1975 க்கு முன்னால் இருந்தது என்று சொல்கிறார். அது திமுக இருக்கும் போது தான் மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் (திமுக) மத்தியில் பல ஆண்டுகள் இருந்த பின்பும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர முயற்சி செய்யவில்லை. ஆனால் புதிய கல்விக் கொள்கை மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் என இல்லாமல் பொதுவான மக்களுக்கு, மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை எத்தனை கிராமப்புற மாணவர்கள் இதற்கு நீட் தேர்வுக்கு முன்னால் பயன் பெற்றார்கள்? நீட் தேர்வுக்கு பின்னால் பலன் பெற்றார்கள் என்று பார்க்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.