Skip to main content

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மரணம்!

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த  சென்னை வீரர் ஒருவர் நேற்று நடந்த விபத்தில் பரிதாபமாக பலியானார் சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

 

player



இதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன் விடுமுறைக்கு  சென்னை வந்துள்ளார். இந்த நிலையில் அரும்பாக்கம் வழியாக இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது லாரியை முந்த முயன்றபோது திடீரென நிலைதடுமாறி லாரிக்கு அடியில் விழுந்தார். இதனால் லாரியின் சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விடுமுறைக்கு ஊருக்கு வந்த விளையாட்டு வீரருக்கு நேர்ந்த பரிதாபத்தால் அவருடைய உறவினர்கள் பெரும் சோகமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.