Skip to main content

போலி பத்திரம் மூலம் அடுத்தவர் இடத்தை அபகரிக்க முயன்ற அரவிந்தர் ஆசிரம ஊழியர் கைது!

Published on 13/06/2018 | Edited on 13/06/2018
pol


புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மீர் சுல்தான் மொஹிதின், சதாத் சுனிஸாபேகம் ஆகியோருக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்துக்கு தயார் செய்யப்பட்ட போலி ஆவணம் மூலம் கடந்த 18-1-2012 ல் ஆரோக்கியராஜ் என்பவர் சாரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய சென்றார்.

அப்போது, அந்த ஆவணத்தை அப்போதைய சார் பதிவாளர் அன்பழகன் ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த ரஜினிஷ்குமார் ராய், இளங்கோ ஆகியோர் போலியாக பத்திரம் தயார் செய்து அதனை பதிவு செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை தேடினர். ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாகினர். இந்நிலையில் கடந்த 6 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த ரஜினிஷ்குமார் ராயை போலீஸார் இன்று கைது செய்தனர்.

பின்னர் அவரை புதுச்சேரி இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதே இடத்துக்கு ரஜினிஷ்குமார்ராய், மதியழகன் ஆகியோர் 1944 மற்றும் 1946ம்ஆண்டில் தங்கள் பெயரில் இருப்பது போன்று போலி பத்திரம் தயாரித்து விற்க முயன்றுள்ளனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் இவர்கள் இருவரும் முன்ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்