திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு அருகே உள்ள மேல கோவில்பட்டியில் வீட்டுக்கு இரண்டு பேர் வீதம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் தீவிரவாதஅமைப்பு மூலம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த 44 ராணுவ வீரர்கள் தீவிரவாத தற்கொலை படையால் விபத்து ஏற்படுத்திகொல்லப்பட்டசம்பவம் இந்திய நாட்டையே பெரும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3f6fb211-40e3-406c-98a3-9fb02d8c4bd1 (1).jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அது போல் மேல கோவில்பட்டியில் வாழும் ராணுவ கிராம மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேல கோவில்பட்டியில் வாழும் மக்கள் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மேல கோவில்பட்டியில் உள்ள புனித சவேரியார் ஆலய வளாகத்தில் நடந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/b0de9cb9-86c2-4ad9-8556-e439f28db4a4.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கு தந்தை ஜெயராஜ் தலைமையில் ஊர் மக்கள் ராணுவ வீரர்களின் படங்களுக்கு மலர்அஞ்சலி செலுத்தினார்கள். அதுபோல் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கூட்டுப் பிரார்த்தனையும் நடத்தினரார்கள். அதன்பின் ஊர்மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலமாக சென்று ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)