Skip to main content

தமிழகத்தில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் தொல்லியல் பயிற்றுவிக்க தொல்லியல் மன்றம் துவக்கம்!

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

கீழடி அகழாய்வுக்குப்பின் கல்லூரி மாணவர்களிடையே தொல்லியல், பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மாணவர்களின் ஆர்வத்தை நிறைவேற்றவும், தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு போன்றவற்றை அவர்கள் தெரிந்து கொள்ளவும் தமிழகத்தில் முதன்முறையாக ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரியில் தொல்லியல் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் நடந்த மன்றத் தொடக்கவிழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் க.மகுதம்மாள் தலைமை வகித்துப் பேசும்போது,

 

 Archaeological forum to be launched for the first time in Tamil Nadu


“ராமநாதபுரம் மாவட்டம் பாரம்பரிய சிறப்புமிக்கது. இம்மாவட்டத்தில் பல தொல்லியல் தடயங்கள் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிதைந்து வருகின்றன. மேலும் 2600 ஆண்டுகள் பழமையான கீழடியை விட அகழாய்வில் அதிக பொருட்கள் கிடைத்த அழகன்குளம், தேரிருவேலி ஆகியவை ரோமானியருடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த  சர்வதேச நகரங்கள் ஆகும். தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று அவற்றின் சிறப்புகளைத் தெரிந்துகொண்டால்தான் அவற்றை பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் ஏற்படும். 

மாவட்டத்தில் சிறப்பாக வழங்கிவரும் கலைகள், நாட்டுப்புறப்பாடல்கள், வாய்மொழி வரலாறு ஆகியவற்றை இம்மன்றம் மூலம்  மாணவர்கள் தேடித் தொகுக்க வேண்டும். தங்கள் பகுதிகளில் உள்ள ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள், தொல்லியல் தடயங்கள் ஆகியவற்றை தேடிக் கண்டறியவேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார். 

 

 Archaeological forum to be launched for the first time in Tamil Nadu


தமிழ்நாட்டிலேயே ஒரு முன்மாதிரியாக இம்மன்றத்தை இக்கல்லூரியில் முதன்முதலில் தொடங்குவதாகத் தெரிவித்தார்.

உடற்கல்வி இயக்குநர் சோ.மணிமுத்து அனைவரையும் வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் மெ.செந்தாமரை முன்னிலை வகித்தார். இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் தொல்லியல் ஆய்வாளருமான  வே,ராஜகுரு.. “தொல்லியல் மன்றமும் ராமநாதபுரம் மாவட்டச் சிறப்புகளும்” என்ற தலைப்பிலும், ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனி.. “சங்ககாலக் கல்வெட்டுகள்” என்ற தலைப்பிலும் பேசினர். தொல்லியல் மன்றச் செயலாளர் முனைவர் அதிசயம் நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.