Appreciation ceremony for Tamil Nadu ISRO scientists

Advertisment

இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா நடைபெறுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குத்தமிழக அரசு சார்பில், ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்குத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார். இந்த விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் நாளை (02.10.2023) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தமிழக விஞ்ஞானிகளான கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி. நாராயணன், ஏ. இராஜராஜன், எம். சங்கரன், ஜெ. ஆசிர் பாக்கியராஜ், மு. வனிதா, நிகார் ஷாஜி மற்றும் ப. வீரமுத்துவேல் ஆகியோர் தமிழக அரசு சார்பில் பாராட்டி கவுரவிக்கப்பட உள்ளனர்.