Published on 04/06/2022 | Edited on 04/06/2022
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி உள்ளிட்ட 9 பேர் பதவியேற்றனர். இவர்கள் அனைவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து அண்மையில் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்த நிலையில், 9 பேரில் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர். தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது.