Skip to main content

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

Anti-corruption summons to MR Vijayabaskar

 

கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு புகார் வந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 22- ஆம் தேதி அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சென்னை, கரூர் உள்ளிட்ட 26 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, கடந்த ஜூலை 30- ஆம் தேதி அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

 

இருப்பினும், விசாரணைக்கு நேரில் ஆஜராக அவகாசம் கோரியிருந்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இந்த நிலையில், சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைமை அலுவலகத்தில் வரும் அக்டோபர் 25- ஆம் தேதி அன்று நேரில் ஆஜராகுமாறு, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

8ஆவது சம்மனும் புறக்கணிப்பு; அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Arvind Kejriwal's sensational response from the Enforcement Directorate

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்தச் சூழலில் கடந்த 02-02-2024 அன்று விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த பிப். 14 ஆம் தேதி 6வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. அதில், வருகிற 19 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தெரிவித்திருந்தது. அதனையும் கெஜ்ரிவால் புறக்கணித்த நிலையில், தற்போது கடந்த மாதம் 22ஆம் தேதி 7ஆவது முறையாக அமலாக்கத்துறை அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், 7 முறையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. 

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு இன்று (04-03-24) ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 8வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கிடையில், தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத்துறை மூலமாக தன்னை கைது செய்து பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க பா.ஜ.க முயற்சி வருகிறது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், இன்று ஆஜராகுமாறு 8வது முறையாக சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. 

இந்த நிலையில், அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அனுப்பியுள்ளார். அதில், வரும் மார்ச் 12ஆம் தேதிக்கு பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலம் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகத் தயார் என்று தெரிவித்துள்ளார்.  

Next Story

விவசாயிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம்; பின்வாங்கிய அமலாக்கத்துறை?

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
Issue of Summons to Farmers and Lagging enforcement?

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு கடந்த ஆண்டு ஜூலையில் அமலாக்கத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் உள்ள முகவரியில் சாதி பெயரை குறிப்பிட்டு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டது. இதையொட்டி,சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு தங்களது ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்று குறிப்பிட்ட தேதியில் ஆஜராகியுள்ளனர்.

இந்த சம்மன் தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக வந்த எழுதப் படிக்கத் தெரியாத பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் இருவரும் மிரட்டி துன்புறுத்தப்பட்டதாக நுங்கம்பாக்கம் போலீசில் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் மூலம் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக அமலாக்கத்துறை மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த புகார் குறித்து வழக்கறிஞர் பிரவீனாவிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை நடத்தினர். அதேசமயம் விவசாயிகளின் 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 2ஆம் தேதி புகார் மனு அளித்தனர். எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் நிலத்தை அபகரிக்க முயன்ற விவகாரத்தில் பாஜக நிர்வாகி குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், விவசாயிகளுக்கு சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியிருந்ததையொட்டி, கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து விவசாயிகள் மீதான வழக்கைக் கைவிட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.