Skip to main content

ஊழல் தடுப்பு; மணல் சிற்பத்தால் விழிப்புணர்வு.. (படங்கள்)

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 


ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி மணல் பார்வையிட்டார். இதனைக் கடற்கரைக்கு வந்த சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திறன் மிக்க வாக்காளராகுங்கள்” - கையேடு வெளியீடு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Become an Effective Voter  Handbook Release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு முதன்மை செயலாளருமான சத்யபிரதா சாகு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “திறன் மிக்க வாக்காளராகுங்கள்” என்ற வாக்காளர் கையேட்டினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (25.03.2024) வெளியிட்டார்.

இந்த கையேட்டில், “மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு... லஞ்ச ஒழிப்புத்துறை எச்சரிக்கை!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Anti-corruption department warns government employees to be wary of fake reporters

திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சட்டப்படியான பணியை செய்யாமல் கையூட்டு பெறுபவர்களை அடையாளம் கண்டு, சம்மந்தப்பட்ட ஊழியர்களின் மீது சட்ட நடவடிக்கைகளானது திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த சில நாட்களாக, தினசரி பத்திரிக்கைகள், வார பத்திரிக்கைகள் மற்றும் மாதப்பத்திரிக்கைகளில் பணிபுரியும் நிருபர்கள் என்று சொல்லிக்கொண்டு போலியான சில நிருபர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்று, குறிப்பாக சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகங்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்கள் ஆகிய அலுவலகங்களுக்குச் சென்று அங்குள்ள அரசு அலுவலர்களிடம், உங்களைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பொய்யான தகவலை அளிப்பேன் என மிரட்டி பணம் பறித்து வருகிறார்கள் என்ற தகவல் எங்களது துறையின் கவனத்திற்கு தெரிய வருகிறது. அதேபோல் மேலும் சில மோசடி நபர்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களின் கைபேசிகளுக்கு பொது தொலைபேசிகளில் இருந்து அழைத்து, தங்களை விஜிலன்ஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு மிரட்டி பணம் பறித்து வருகிறார்கள் என்ற தகவலும் எங்களது துறையின் கவனத்திற்கு தெரிய வருகிறது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் பணிபுரியக்கூடிய அரசு ஊழியர்கள் எவருக்கேனும் மேற்படியான நிகழ்வுகள் ஏதேனும் ஏற்படும் சூழ்நிலையில் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள், போலி நிருபர்கள் பற்றிய தகவலை, உடனடியாக சம்மந்தப்பட்ட  உள்ளூர் காவல்துறையினருக்கு புகார் அளிக்குமாறும், விஜிலன்ஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் போலியான நபர்கள் பற்றிய விவரங்களை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரிவிக்க வேண்டுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இச்செய்தியினை திருச்சி மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரியும் உயர் அலுவலர்கள், தங்கள் கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தி எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையின் அலுவலக தொலைபேசி எண்.0431-2420166, டி.எஸ்.பி கைபேசி எண்.94981-57799 காவல் ஆய்வாளர்களின் கைபேசி எண்கள்- 94432-10531, 94981-05856, 94981-56644, 89036-35766 எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.