Skip to main content

நீட் தேர்வு மோசடியில் மேலும் ஒரு மாணவி தாயுடன் கைது! விடிய விடிய சிபிசிஐடி விசாரணை!!

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து இருப்பது சமீபத்தில் தெரியவந்ததின்மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை சிபிசிஐடினர் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் மோசடி செய்யப்பட்டது முதலில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து உதித்சூர்யா  டாக்டர் வெங்கடேசனும்  கைது செய்யப்பட்ட பிறகு நீட் முறைகேடு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. அந்த இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல மாணவர்களுக்கு நீட் ஆள்மாறாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது இதை அடுத்து பிரவீன், ராகுல் ஆகிய இரு மாணவர்களும் அவர்களது தந்தைகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 Another student arrested for fraud in neet exam CBCID investigation

 

இன்னொரு மாணவரான இர்பான் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டார். இர்பான் கோர்ட்டில் சரணடைந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதுபோல் சென்னையை சேர்ந்த மாணவி அபிராமியை சிபிசிஐடி போலீஸ் சிக்கினார். அவரது புகைப்படத்தில் சந்தேகம் எழுந்ததால் அபிராமியை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டு உடனடியாக உறுதி செய்யப்படவில்லை அதையடுத்து அவரது புகைப்படங்களை போலீசார் தடவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். இதன் முடிவுகள் வந்த பின்னரே அபிராமி கைது செய்யப்படுவாரா  என்பது பற்றி சிபிசிஐடி முடிவு எடுக்க உள்ளதாக  தெரிகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் சென்னை கல்லூரியில் படித்து வந்த மேலும் ஒரு மாணவி சிக்கியுள்ளார். அவரது பெயர் பிரியங்கா தர்மபுரியை சேர்ந்த அவர் சென்னை அருகே உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். நீட் முறைகேட்டுக்கு பிறகு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின்போது தான் மாணவி பிரியங்கா மதிப்பெண் சான்றிதழ்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி மருத்துவ கல்லூரி சார்பில் சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சென்னை சிபிசிஐடி போலீசார் மாணவி பிரியங்காவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது தாய் மைனாவதி யுடன் சேர்ந்து மதிப்பெண்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

 

mm


இதனையடுத்து மாணவி பிரியங்காவையும் தாய் மைனாவதியும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்து விடிய விடிய அதிரடி விசாரணை செய்தனர். அதில் மதிப்பெண்களை நிறுத்தியது மட்டுமல்லாமல்  மாணவி பிரியங்கா அதற்காக வேறு ஒரு மாணவி தேர்வு எழுத வைத்திருப்பதும் விசாரணையில்  தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து மாணவி பிரியங்காவையும் தாயையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர். ஏற்கனவே நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் நான்கு மாணவர்கள் அவர்களது தந்தைகள் என எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்முறையாக நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஒரு மாணவி கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று தேனி கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த மாணவர்கள் பிரவீன், ராகுல் மற்றும் அவரது தந்தை சரவணன், டேவிஸ் அவரது மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பன்னீர்செல்வம் கூறும்போது..

இந்த வழக்கில் புகார்தாரர் யார் என இதுவரை கண்டறியப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு கமிட்டி உறுப்பினர்களை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை புரோக்கர் ரசீதை ஏன் இன்னும் கைது செய்யவில்லை. மாணவர் பிரவீன் படித்த கல்லூரி தேனி மருத்துவக் கல்லூரியில் ஆவணம் முறைகேட்டிற்கு துணை போனது யார் என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிபிசிஐடி போலீசார், புரோக்கர் அரசு ரசீதை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள் என்று தெரிவித்தனர். கல்லூரிகளில் முறைகேடு நடத்தியவர்கள் அவற்றை கண்டறிந்து விசாரணைக்குழு அலுவலர்கள், முதல்வர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிற 14-ம் தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் நீதிமன்ற காவலில் வருகிற 25ஆம் தேதி வரை நீடிக்க உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள புரோக்கர்கள் ரசீது மற்றும் வேதாச்சலம் ஆகியோர் பிடிபட்டால் மட்டுமே இந்த நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள் என தெரிகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.