Annamalai University staff wore black card  to emphasize 12-point demands.

சிதம்பரம் அண்ணாமலைபல்கலைக்கழகத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு தனிச்சட்டம் இயற்றி அரசு ஏற்றது. அதன் பிறகு ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களது பதவி உயர்வு, பணப்பலன்கள், தொகுப்பு மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் பல்கலைக்கழக நிர்வாகம் நிதிச்சிக்கலை காரணம் காட்டி இதுவரை எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisment

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த2 மாதங்களாக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் கூட்டமைப்பினர் பல்கலைக்கழகத்தில் 4 முறை வாயில் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதற்கு நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்லுதல், மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துதல், ஊர்வலமாகச் சென்று உதவி ஆட்சியரிடம் மனு அளித்தல், உண்ணாவிரதப் போராட்டம், தொடர் காலவரையற்ற போராட்டம் என 6 கட்டப் போராட்டத்தை கடந்த வாரம் அறிவித்தனர்.

Advertisment

இதன் முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்லும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்தபடி பணிக்குச் சென்றனர். கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் புதன்கிழமையும் நடைபெறுகிறது. கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று பல்கலைக்கழக ஜாக் கூட்டமைப்பினர்அறிவித்துள்ளனர்.