/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vcbvx.jpg)
அண்ணாமலை பல்கலைகழகம் ஆன்லைன் மூலம் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டயப்படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வேளாண் புலத்தில் 8,654 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 8,346 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 21 நபர்கள் மாற்றுத்திறனாளிகள். இதுபோல வேளாண் புலத்திலுள்ள சுயநிதிப் பிரிவில் 2,815 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 2,727 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தோட்டக்கலையில் சேர்வதற்கு 1,669 மாணவர்கள் விண்ணப்பித்து அதில் 1,628 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதைத் தவிர, தோட்டக்கலை மற்றும் விவசாயத் துறைகளுக்கான பட்டயப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இதில் வேளாண்துறையில், வெள்ளக்கோயில் ஊரைச் சேர்ந்த சுவாதி 197.5 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றார். கோபிசெட்டிப் பாளையத்தைச்சேர்ந்த ஸ்ரீமதி 196 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தையும், சிதம்பரத்தைச் சேர்ந்த அபிராம ஸ்ரீ 193 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
வேளாண்துறை சுயநிதிப்பிரிவில் கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி 196 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கும்பகோணத்தைச் சேர்ந்த அபி ராகுல் 190 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், கரிமங்கலத்தைச் சேர்ந்த சன்மதி 189 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இதுபோலவே, தோட்டக்கலைத் துறையில் காளையார்கோயிலைச் சேர்ந்த அல்ஃபினா 192 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ஈரோட்டைச் சேர்ந்த கவிந்தரன் 197 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தையும், திருவட்டாரைச் சேர்ந்த தர்ஷினி 189.5 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
அனைத்து விவசாய, தோட்டக்கலை பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும். இதற்கான விபரங்கள் இரண்டு தினங்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்வையிட்டு அறிவிப்புகளை அறிந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்குத்தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பப்படமாட்டாது என்றும் கூறினார்.
தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் வெளியிட பதிவாளர் பேராசிரியர் இரா.ஞானதேவன் பெற்றுக்கொண்டார். இதில் வேளாண் புல முதல்வர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, இயக்குநர், அகடமிக், AIC, மாணவர் சேர்க்கை ஆலோசகர், மற்றும் வேளாண்புல துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)