Skip to main content

அண்ணா பல்கலைக் கழகத்தில் 43வது பட்டமளிப்பு விழா (படங்கள்)

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 43வது பட்டமளிப்பு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில், பல்கலைக்கழகங்களின் வேந்தரான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளக்காடான சென்னை; ஆம்புலன்ஸ்கள் செல்ல சிறப்பு ஏற்பாடு

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

Flood-prone Chennai; Special arrangement for ambulances

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் செல்ல சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆம்புலன்ஸ்கள்  சிக்கல் இல்லாமல்  செல்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வழித்தடங்களை சென்னை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கனநேரத்தில் 40 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்; வேளச்சேரியில் சோகம்

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 The workers were momentarily trapped in a 40-foot ditch; Tragedy in Velachery

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் 40 அடி பள்ளத்தில் ஐந்து தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் லைலேண்ட் நிறுவனத்தால் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் பள்ளத்தில் தொழிலாளர்கள் உள்ளே விழுந்தனர். தற்போது வரை மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திடீர் பள்ளத்தில் சுற்றியுள்ள மழை நீர் இறங்கி வருகிறது. கனநேரத்தில் நிகழ்ந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரிவான அலசல் கட்டுரைகள்