Skip to main content

3ஆம் நாளாக தொடரும் அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம்...!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Anganwadi workers' struggle to continue for 3rd day ...!

 

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் 22ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. அவர்களது கோரிக்கைகளான, “அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்க வேண்டும்.

 

பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 3 வருட பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 வருட பணி முடித்த உதவியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்” உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் 22 ம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

 

அதன்படி  மாவட்டத்தில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களின் காத்திருப்பு போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது. 100 க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் போராட்டக் களத்திலேயே இரவு முழுவதும் கடும் பனியைக் கூட பொருட்படுத்தாமல் தங்களது காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்காக தாலுகா அலுவலகத்தில் உள்ள காலி இடத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

 

Anganwadi workers' struggle to continue for 3rd day

 

அதில் அவர்கள் இரவு தூங்கினர். இந்நிலையில் 24ம் தேதி  3-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேரம் செல்ல செல்ல பல்வேறு பகுதிகளில் இருந்தும் அங்கன்வாடி ஊழியர்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்குப் போராட்டக் களத்திலேயே உணவு வழங்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் அதே ஈரோடு தாலுகா அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையை ரூபாய் 3 ஆயிரமாகவும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்; தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் குடியிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இரண்டு நாட்களாக இரவு கடும் பனியைக் கூட பொருட்படுத்தாமல் விடிய விடிய குடியிருப்பு போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.