தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் இருந்துவந்தார்.
இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. தேர்தல் பணிக்காகவும் கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் தேனி மாவட்டத்தை தெற்கு, வடக்கு என இரண்டாகப் பிரித்தனர். இதில் தெற்கு மாவட்டத்தில் உள்ள கம்பம், ஆண்டிபட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் மாவட்ட செயலாளராக கம்பம் ராமகிருஷ்ணனை நியமிக்கப்பட்டார். அதுபோல் வடக்கு மாவட்டத்தில் உள்ள போடி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளின் மாவட்ட செயலாளராக தங்கத்தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர்கள் கம்பம் ராமகிருஷ்ணனும் தங்கத்தமிழ்ச்செல்வனும் தொகுதியில் அக்கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொகுதியான போடியில் ஆளும் கட்சியினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மாற்று கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கத்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.