Skip to main content

மதுரையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் - 'வாக்காளர் பட்டியல் பார்வையாளர்' பங்கேற்பு! 

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

All Party Representatives Consultative Meeting in Madurai - Voter List Observer Participation!

 

மதுரை மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அரசியல் கட்சியினர் ஒத்துழைப்புத்தர வேண்டும் என 'வாக்காளர் பட்டியல் பார்வையாளர்' சிஜி தாமஸ் வைத்தியன் தெரிவித்துள்ளார்.

 

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (30.12.2020) நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், " 'வாக்காளர் பட்டியல்-2021' ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதில் 1,500 வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடியாக மாற்றப்படும்" என்று கூறினார்.

 

மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் ஓட்டு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். இதற்கு அனைத்துக் கட்சியினரும் அவர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கக்கூடாது எனும் கருத்தைப் பதிவு செய்தனர் . 

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிஜி தாமஸ் வைத்தியன் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளைத் தவறாது கடைப்பிடித்து அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்துக் கட்சியினரும் முழுமையான ஒத்துழைப்புத் தர வேண்டும் எனத் தெரிவித்தார். கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.